Saturday, April 18, 2020

வடசங்கந்தி மக்களுக்கு முகக்கவசம்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள வடசங்கந்தி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு முகக்கவசம் இரண்டாவது முறையாக வழங்கப்பட்டது. இதற்காக திருப்பூரில் இருந்து 700 முக கவசங்கள் வரவழைக்கப்பட்டு வழங்கியதாக வடசங்கந்தி கிராமத்தலைவர் மோகன் அமிர்தலிங்கம் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் பாக்கியவதி பாலதண்டாயுதம், முருகேசன் சபாபதி, பிரேமா முருகேசன், வீரகுமார் ராமசாமி, முருகப்பாண்டி மாணிக்கம், சுமதி பாலசுப்பிரமணியம் ஆகியோரும் கலந்து கொண்டார்கள் என்று தெரிவித்த மோகன், வடசங்கந்தி புளு வாரியர் இளைஞர் மன்றத்தை சேர்ந்த சபரி குமார், சூர்யா ரவி, பொதுவடை முருகேசன், குமரேசன் மனோகர், கோகுல் முருகேசன் ஆகியோர் கபுசுர குடிநீர் கசாயம் தயாரிக்கவும், வழங்கியும் உதவினார்கள் என்றும் கூறினார். 

வடசங்கந்தி கிராமத்தில் கிருமி நுழைவதை தடுக்க இன்று இரவு அனைவரது வீட்டிலும் ஒரே நேரத்தில் சாம்பிராணி புகை போடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். 

Saturday, April 4, 2020

மக்கள் ஒத்துழைப்பு அவசியம்? - வடசங்கந்தி ஊராட்சி தலைவர் அ.மோகன்

கரோனா வைரஸ் பேரைக் கேட்டாலே அதிர்வலைகள் ஏற்படுகிறது. இந்த வைரஸ் யாரை எப்போது தாக்கும் என்ற அச்சம்தான் உலகையே இன்று கலங்க வைத்திருக்கிறது. இந்த சூழலில், நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  

உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படியு கரோனா வைரஸை கட்டுப்படுத்த தேவையான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள வடசங்கந்தி கிராமத்தில் , 'கரோனா' தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் வீதிகளில் 'பிளீச்சிங் பவுடர்' தூவப்பட்டுள்ளது. 

பிளிச்சிங் பவுடர்  தூவுதுல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப்பணிகளில், பணியாளர்கள் பம்பரமாய் சுழன்று பணியாற்றி வருகின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் கிராமத்தின் தலைவர் . அ.மோகன் ஈடுபட்டு வருகிறார். 

அவர் நம்மிடம் கூறும் போது, தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, வடசங்கந்தி கிராமத்தில் , 'கரோனா' தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆடசித்தலைவர் அவர்களும் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி, கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஆலோசனைகள் வழங்கி, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு அறிவுரைகளை வழங்கி வருகிறார். 

தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவுதல், சுற்றுப்புறத்தை கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்து, சுய கட்டுப்பாட்டினை கடைப்பிடித்தாலே இந்த கரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து விடலாம் என்று தெரிவித்துள்ள வடசங்கந்தி ஊராட்சி மன்றத் தலைவர் மோகன், பிளிச்சிங் பவுடர்  தூவுதுல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப்பணிகளை நாங்கள் மேற்கொண்டாலும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே எல்லாம் சாத்திய மாகும் என்றும் கூறி இருக்கிறார். 

மேலும் அவர் கூறுகையில் வடசங்கந்தி ஊராட்சி மக்களுக்கு கொரனா நிவரன பொருள் வழங்கப்பட்டது என்றும் தமிழக அரசின் ஆயிரம் ரூபாய் மற்றும் உணவு பொருட்களை மிகவும் பாதுகாக்க வழங்கப்பட்டது  என்றும் கூறி இருக்கிறார் 


Monday, June 5, 2017

தகட்டூரில் மோகனா மகன் சாம்ராஜ் திருமணம்


சாம்ராஜ்

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மகாராஜபுரத்தை சேர்ந்தவர் டி.மகேந்திரன். இவர் வடசங்கந்தி வைத்தியலிங்கம் – வனரோஜா தம்பதிகளின் மகள் மோகனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரே மகன் சாம்ராஜ்.

பி.எஸ்.சி. பட்டதாரியான சாம்ராஜ், சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தகட்டூர் பண்டாரதேவன்காடு கிராமத்தை சேர்ந்த, டி.வைரக்கண்ணு – மாரிமுத்து தம்பதிகளின் மகள் இராஜகிருத்திகாவுக்கும் இன்று, ஜூன் 5 ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு தகட்டூர் ஸ்ரீபைரவர் கோவிலடி, தாரா திருமண அரங்கில் திருமணம் நடைபெற்றது. 

இந்த திருமண விழாவில் மகாராஜபுரம் உமா ராஜேந்திரன், டி.முருகையன், சந்திரோதயம் முருகையன், பண்டாரதேவன்காடு டி.சுப்பிரமணியன், மலர்க்கொடி சுப்பிரமணியன், டி.உலகநாதன், வெற்றிச்செல்வி உலகநாதன், வடசங்கந்தி வை.சரவணன், கலாவதி சரவணன், 

சென்னை எம்.அசோக்குமார், விஜயா அசோக்குமார், பன்னாள் பி.ராஜேந்திரன், முகில் ராஜேந்திரன், தில்லைவிளாகம் எம்.பிரபாகரன், சுகன்யா பிரபாகரன், மகாராஜபுரம் எஸ்.பத்மநாபன், சந்திரா பத்மநாபன், தாணிக்கோட்டகம் கே.அனபழகன், செல்வி அன்பழகன், சுஜிதா சுரேஷ்,  வடசங்கந்தி அ.முருகேசன், பிரேமா முருகேசன், அ.விக்னேஷ், சென்னை ஆர்.கார்த்திக், பிரியதர்ஷினி கார்த்திக், மகாராஜபுரம் எம்.ஏசுதாஸ்,

இராமகோவிந்தன்காடு சி.பாலசுப்பிரமணியன், பா.கலையரசி, அகஸ்தியம்பள்ளி எஸ்.மகேந்திரன், ம.பாக்யலட்சுமி, பண்டாரதேவன்காடு எஸ்.பாலசுப்பிரமணியன், பா.கலையரசி, எஸ்.பூமிநாதன், பூ.மலர்க்கொடி, எஸ்.வைத்தியநாதன், வை.ஆண்டாள், எஸ்.துரைமுருகன், து.சூர்யா, தேன்மொழி ராமகிருஷ்ணன், ஆர்.சதீஷ், ஆர்.சரத், தாணிக்கோட்டகம் எஸ்.ரவி, ஆர்.சித்ரா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Saturday, June 3, 2017

கலையரசி இரண்டாவது மகன் திருமணம்



எக்கல் அழகு - தங்கப் பாப்பம்மாள் தம்பதியர் மகன் முருகேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் வேதையன் – சென்பகவள்ளி தம்பதிகளின் ஒரே மகள் கலையரசி.

சென்னை தாம்பரம் அருகே உள்ள பொத்தேரி, காவனூர் பகுதியில் உள்ள செந்தமிழ்நகரில் வசித்து வரும், இவருக்கு விஜயேந்திரன், அறிவழகன் என்கிற இரு மகன்களும், சென்பக சூர்யா என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

மூத்தமகன் விஜயேந்திரனுக்குவலிவலம்குழந்தைவேலு மகள்ஜெயந்திஎன்பவரை திருமணம்செய்து வைத்தார். மகள் சென்பக சூர்யாவுக்கு குன்றத்தூரில் திருமணம் செய்து வைத்தார். 

இன்று இரண்டாவது மகன் அறிவழகனுக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

ராஜகோபால் மகன் திருமணம்.



வடசங்கந்தி மேலத்தெரு ஆர்.கிருஷ்ணமூர்த்தி – மங்கையகரசி தம்பதிகளின் மகன் கி.ராஜகோபால். இவர் வேளாங்கன்னி அருகே பிரதாபராமபுரம் சுப்பிரமணியன் - பஞ்சவர்ணம் மகள் திலகவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விமலேஷ்வரன், ஜெயப்பிரியன் என இரு மகன்கள் உள்ளனர். 

இதில் மூத்த மகன் விமலேஷ்வரனுக்கு, தனது மைத்துனர் பிரதாபராமபுரம் கே.எஸ்.வீரகணபதி – சுதா தம்பதிகளின் மகள் சங்கவி என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்தார்.  

வேதாரண்யம் சாலையில் உள்ள பிரதாபராமபுரம் ஞானம்பாள் ஜெயரம் திருமண மண்டபத்தில், ஜுன் மாதம் 1 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு விமலேஷ்வரன் – சங்கவி திருமணம் நடைபெற்றது. 

திருமண விழாவில் சங்கீத்குமார், அபிநயா சங்கீத்குமார், ஆனந்தவள்ளி அம்பிகா, கே.எஸ்.பூபதி, சரோஜா, கே.எஸ்.சபாபதி, பானுமதி, கலைச்செல்வி தனபதி, கே.எஸ்.நீதிபதி, தாமரைச்செல்வி, கே.பாலமுருகன், அமராவதி, ரேவதி வைரமுத்து, எம்.உலகநாதன், உ.ராஜேஸ்வரி, தமிழ்செல்வி சந்திரசேகரன், எம்.கல்யாணசுந்தரம், க.சரோஜா, கே.முருகேசன், கே.வசந்தா, கே.குமார், கு.மங்கை, ஆர்.ஜெயப்ப்ரியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்