Saturday, April 4, 2020

மக்கள் ஒத்துழைப்பு அவசியம்? - வடசங்கந்தி ஊராட்சி தலைவர் அ.மோகன்

கரோனா வைரஸ் பேரைக் கேட்டாலே அதிர்வலைகள் ஏற்படுகிறது. இந்த வைரஸ் யாரை எப்போது தாக்கும் என்ற அச்சம்தான் உலகையே இன்று கலங்க வைத்திருக்கிறது. இந்த சூழலில், நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  

உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படியு கரோனா வைரஸை கட்டுப்படுத்த தேவையான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள வடசங்கந்தி கிராமத்தில் , 'கரோனா' தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் வீதிகளில் 'பிளீச்சிங் பவுடர்' தூவப்பட்டுள்ளது. 

பிளிச்சிங் பவுடர்  தூவுதுல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப்பணிகளில், பணியாளர்கள் பம்பரமாய் சுழன்று பணியாற்றி வருகின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் கிராமத்தின் தலைவர் . அ.மோகன் ஈடுபட்டு வருகிறார். 

அவர் நம்மிடம் கூறும் போது, தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, வடசங்கந்தி கிராமத்தில் , 'கரோனா' தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆடசித்தலைவர் அவர்களும் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி, கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஆலோசனைகள் வழங்கி, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு அறிவுரைகளை வழங்கி வருகிறார். 

தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவுதல், சுற்றுப்புறத்தை கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்து, சுய கட்டுப்பாட்டினை கடைப்பிடித்தாலே இந்த கரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து விடலாம் என்று தெரிவித்துள்ள வடசங்கந்தி ஊராட்சி மன்றத் தலைவர் மோகன், பிளிச்சிங் பவுடர்  தூவுதுல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப்பணிகளை நாங்கள் மேற்கொண்டாலும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே எல்லாம் சாத்திய மாகும் என்றும் கூறி இருக்கிறார். 

மேலும் அவர் கூறுகையில் வடசங்கந்தி ஊராட்சி மக்களுக்கு கொரனா நிவரன பொருள் வழங்கப்பட்டது என்றும் தமிழக அரசின் ஆயிரம் ரூபாய் மற்றும் உணவு பொருட்களை மிகவும் பாதுகாக்க வழங்கப்பட்டது  என்றும் கூறி இருக்கிறார்