Friday, August 21, 2009

வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் நகல் வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம்.சந்திரசேகரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் மையங்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வருகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தவற விட்டிருந்தாலோ அல்லது பெயர் மற்றும் முகவரி திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தாலோ நகல் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு 001சி படிவத்தில் குடியிருப்பதற்கான ஆதாரத்துடன் ரூ.15 செலுத்தி வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருக்கு மனு செய்து, நகல் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மற்றும் மாற்று வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த மையங்கள் குறைதீர்க்கும் மையங்களாகவும் செயல்படுகின்றன. ஆண்டுமுழுவதும் இந்த மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மனுக்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tuesday, August 18, 2009

கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

திருவாரூர், ஆக. 17: தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ்மன்றம் சார்பில், திருவாரூர் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆக. 21-ல் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் திரு.வி.க. அரசுக் கல்லூரியில் நடைபெறவுள்ள இப்போட்டியில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

போட்டிக்கான தலைப்புகள் போட்டி நடைபெறும் நேரத்தில் தெரிவிக்கப்படும். போட்டிகளுக்கான தலைப்பு தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் குறித்த வகையில் அமையும். ஒரு கல்லூரியிலிருந்து ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு மாணவர் வீதம் அனுப்ப வேண்டும். ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஆனால் ஒரே மாணவர் அனைத்துப் போட்டியிலும் பங்கு பெறலாம். அதற்கேற்றவாறு நேரம் ஒதுக்கித் தரப்படும்.

போட்டிகளின் முடிவுகள் போட்டி நடைபெறும் நாளன்றே தெரிவிக்கப்படும். போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முதல் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும். மாவட்ட அளவில் போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்கள் சென்னையில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

இப்போட்டிகள் தொடர்பாக மேலும் விவரம் அறிய, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குநரை அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Sunday, August 16, 2009

தரணி‌குமா‌ர்‌ பி‌றந்‌த நா‌ள்‌ வி‌ழா‌


செ‌ன்‌னை‌, ஆகஸ்‌ட்‌.15: சூ‌‌ளை‌மே‌டு பகுதி‌யி‌ல்‌ வசி‌ப்‌பவர்‌ தி‌ரை‌ப்‌பட தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கி‌ குமா‌ர்‌. இவருக்‌கு இரண்‌டு மகன்‌கள்‌. மூ‌த்‌த மகன்‌ தரணி‌குமா‌ருக்‌கு‌ நே‌ற்‌று ஆறா‌வது பி‌றந்‌த நா‌ள்‌. அதனை‌ முன்‌னி‌ட்‌டு நே‌ற்‌று அவரது இல்‌லத்‌தி‌ல பி‌றந்‌த நா‌ள்‌ கொ‌ண்‌டா‌டப்‌பட்‌டது. குமா‌ரி‌ன்‌ தயா‌ர்‌ வை‌ரக்‌கண்‌ணு இந்‌த வி‌ழா‌வு‌க்‌கா‌க வடசங்‌கந்‌தி‌யி‌ல்‌ இருந்‌து செ‌ன்‌னை‌ வந்‌தி‌ருந்‌தா‌ர்‌. பி‌றந்‌த நா‌ளை‌ முன்‌னி‌ட்‌டு பே‌ரனுக்‌கு இனி‌ப்‌பு‌ வழங்‌கி‌ தனது வா‌ழ்‌த்‌து‌களை‌ தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்‌.

இவ்‌வி‌ழா‌வி‌ல்‌ ஜி‌.பா‌லன்‌, தமழ்‌ச்‌செ‌ல்‌வி‌, செ‌ல்‌வநா‌தன்‌, மலர்‌வண்‌ணன்‌, பா‌லகி‌ருஷ்‌ணன்‌, சங்‌கர்‌, மதுபா‌லா‌ என பலர்‌ கலந்‌துகொ‌ண்‌டனர்‌. வி‌ழா‌வு‌க்‌கு வந்‌தவர்‌களை‌ செ‌ல்‌வி‌குமா‌ர்‌ வரவே‌ற்‌றா‌ர்‌.