![]() |
ராஜராஜ சோழன் |
இந்த பதிவை வாசிக்கும் அருமை நண்பர்களே, தோழிகளே உங்களுக்கு என் முதல் வணக்கம்.
எங்க ஊர் பற்றியும் அங்கு வாழும் மக்கள் பற்றியும் எனது மகன் ஆர்வத்துடன் கேட்பது வழக்கம். அவனுக்கு அவ்வப்போது எனக்கு தெரிந்தவரை தகவல்களை கூறுவேன். அப்படி சொன்ன போது, இதை ஏன் பதிவு செய்யக் கூடாது என்று எனக்குள் தோன்றும்... அதன் விளைவுதான் இந்த 'எங்க ஊர் ராஜாக்கள்'.
சூரியனில் இருந்து வெடித்து சிதறிய பிழம்பு பூமியானது. இங்கு சூரிய ஒளி பட்டது. நெருப்பு குழம்பு ஆவியானது. ஆவி மேகமானது. மேகம் மழையை கொட்டியது. நீர் நிறைந்தது. காற்றும் கடமையைச் செய்தது. ஒரு செல் உயிரினம் உருவானது. அப்படியே படிப்படியாக ஒவ்வொரு உயிரினமும் தட்ப வெட்ப நிலைக்கு தகுந்த மாதிரி உருவானது. வளர்ச்சியும் முன்னேற்றமும் மனிதனையும் பரிணமிக்க வைத்தது.
குரங்கு மனிதன்.... கம்பியூட்டர் வரை கண்டுபிடித்து வளர்ந்துவிட்டான். அவனது ஆறறிவு ஆற்றல் இன்று உலகமே வியக்கும் வண்ணம் உருவாக்கி வைத்திருக்கிறது.
அன்று காட்டுவாசியாக குகையிலே, மர பொந்திலே வாழ்ந்து வந்தவன், இன்று ஆடம்பர பங்களாக்களில் வசிக்கிறான். இப்படி அவனது நாகரீகமும் வளர்ச்சியும் படித்தோம் என்றால் பிரமிக்க வைக்கிறது.
எனது தலைமுறையும், முன்னோர்களும் கூட அந்த காட்டுமிராண்டி கூட்டத்தில் இருந்து வந்திருப்பார்கள். இனக் குழுக்களாக வாழ்ந்திருப்பார்கள். மன்னர்கள் ஆட்சியிலும் கூட வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய ஜீன்ஸ் இதோ இன்னும் பரவி பெருகிக் கொண்டே போகிறது.
இதன் தொடக்கம் என்ன? இதற்கு முதல்வன் யார் என்கிற கேள்வியை கேட்கிற போது.... வந்த பாதையை யோசிக்க வைக்கிறது. ஆனால், அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் எள்பதை மட்டும் உணர முடிகிறது. தமிழ் பேசி வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
நீதிக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற சோழ சாம்ராஜ்யத்தின் ஆட்சியில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்த மண்ணை பொன்னாக்க கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்று உணர முடிகிறது.
சூர்ய வம்சத்திலே பிறந்த மனுமாந்தாவின் குலத்தில் சிபி என்னும் மன்னன் இருந்தானாம். அவன் ஒரு புறாவுக்கு தான் அளித்த வாக்கை நிறைவேற்ற அதன் உயிரைக் காக்கத் தன் உடலின் சதையை அறுத்துக் கொடுத்தானாம். அத்தகைய சிபியின் வம்சத்தில் அவனுக்கு பின் தோன்றிய செம்பியன் வம்சத்தினர், ராஜகேசரி, அவரது மகன் பரகேசரி, அவருக்கு பின் வந்த கோ இராஜகேசரி, கோப் பரகேசரி, பசுவுக்கு நீதி வழங்குவதற்காகத் தன் அருமைப் புதல்வனை பலி கொடுத்த மனுநீதிச் சொழன், அவருக்கு பிறகு வந்து இமயம் முதல் இலங்கை வரை ஆட்சி செய்த கரிகால் பெருவளத்தான், இவன் வழியில் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருங்கிள்ளி, கிள்ளிவளவன், கோப்பெருஞ்சோழன், கோச்செங்கணான், பெருநற்கிள்ளி என பலர் இந்த பண்டை தமிழகத்திலே தஞ்சை தமிழர்களை ஆண்டிருக்கறிhர்கள். அவர்களுடைய ஆட்சியிலே என் முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது..
சில காலம் பல்லவ, பாண்டிய மன்னர்கள் கைக்கு ஆட்சி சென்றதாம். அதன் பிறகு வந்த விஜயாலய சோழன், அவரது மகன் ஆதித்த சோழன், அவருக்கு பிறகு அவரது மகன் பரந்தாகத் தேவர், இவருக்குப் பிறகு இவரது மகன் கண்டராதித்த தேவர் ஆட்சி செய்தார். அவருக்கு பிறகு கண்டராதித்ததேவரின் அண்ணன் அரிஞ்சய சோழர் மகன் சுந்தரச் சோழன் அரியனை ஏறி திறம்பட ஆட்சி செய்தார். அவரது மகன் ஆதித்த சோழன் சிறிது காலமும், அவரது அண்ணன் கண்டராதித்த தேவரின் மகன் உத்தமச் சோழன் சிறிது காலமும் ஆட்சி செய்தனர்.
பிறகு சுந்தர சோழரின் மகன் ராஜராஜ சோழன், அவருக்கு பிறகு அவரது மகன் ராஜேந்திர சோழன், அதற்கு பிறகு ராஜாதிராஜன், இராசேந்திர சோழன் II, வீரராஜேந்திர சோழன், அதிராஜேந்திர சோழன், சாளுக்கிய சோழர்கள், குலோத்துங்க சோழன் I, விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன் II, இராசராச சோழன் II, இராசாதிராச சோழன் II, குலோத்துங்க சோழன் III, இராசராச சோழன் III, இராசேந்திர சோழன் III என கி.பி. 848 முதல் கி.பி. 1246-1279 வரை சோழ மன்னர்கள் எம் மண்ணையும், மக்களையும் ஆண்டார்கள் என்பதை உணர முடிகிறது.
அதன் பிறகு பாண்டிய ஆட்சியும், 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சியின் இசுலாமிய ஆட்சியும், அதன் பிறகு அவர்களை முறியடித்த விஜயநகர பேரரசின் ஆட்சியும், அதன் பிறகு நாயக்கர் ஆட்சியும் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செவ்வப்ப நாயக்கரை தொடர்ந்து, அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர், இராமபத்திர நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகியோர் ஆண்டு வந்தனர். இவர்கள் கி.பி.1535 முதல் 1675 வரை 140 ஆண்டுகள் தஞ்சையில் நாயக்கர் ஆட்சியை நடத்தி வந்தனர்.
நாயக்கர்களுக்கிடையேயான பிரச்சினைகளை காரணமாக மராட்டியர் ஆட்சி அரியனை ஏறியது. ஏகோஜியை தொடர்ந்து வந்த சகஜி, முதலாம் சரபோஜி, முதலாம் துளஜா என்ற துக்கேஜி, இரண்டாம் எகேஜி (பாவாசாகிப்), சுசான்பாய், பிரதாபசிம்மன், இரண்டாம் துளஜா, அமரசிம்மர், இரண்டாம் சரபோஜி என கி.பி 1676 முதல் 1855 வரையில் ஏறத்தாழ 180 ஆண்டுகள் மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்தார்கள். அதன் பிறகு மொகலாய ஆட்சி, ஐரோப்பிய ஆட்சி, இந்திய ஆட்சி என எல்லா ஆட்சியிலும் என் முன்னோர்கள் வாழ்ந்து தங்களை வாரிசுகளுடன் நிலை நிறுத்தி வாழ்ந்திருக்கிறார்கள்.
அப்படி எங்களுக்கு முன்னோர்களால் எங்களுக்கு விட்டுச் செல்லப்பட்டவர் சொக்கலிங்க தேவர். அவரை சொக்கப்பன் என்றும் அழைப்பார்களாம். இவர் எனது கொள்ளுப் பாட்டன் ஆவார். சமார் 150 வருடங்களுக்கு முன்பு, அதாவது வெள்ளையர்களின் ஆட்சியின் போது பிறந்தவன். அவனுடைய பேரன்தான் நான்.
நான் (பாலசுப்பிரமணியன்) வடசங்கந்தியில் பிறந்து வளர்ந்தாலும், சென்னையில்தான் வாழ்க்கை. என்னைப் பற்றியும் என் சுயுபராணம் பற்றியும் அடுத்தடுத்த கட்டுரையில் சொல்கிறேன். அதற்கு முன்பாக எனது தந்தை வழி உறவையும், அதற்கு அடுத்த கட்டுரையில் என் தாய் வழி உறவையும், அதற்கு அடுத்த கட்டுரையில் என் மனைவியின் தந்தை வழி, தாய் வழி உறவையும் பதிவு செய்துள்ளேன்..
பிறகு எனது கிராமத்தினரைப் பற்றியும் எனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்துள்ளேன். இது என்னை மட்டுமே பெருமை அடித்துக் கொள்வதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். இது ஒரு வரலாற்று பதிவு. எனது கிராம மக்களோடு வாழ்ந்ததை பெருமையாக நினைக்கிறேன். அவர்களைப் பற்றி பதிவு செய்ததை என் கடமையாக உணர்கிறேன். இன்றைய நிகழ்ச்சி நாளைய வரலாறு என்பது உண்மை தானே?.
இநத்த தகவலை அடிப்படையாக வைத்து அவரவர் அவரது குடும்ப வம்சா வழி தகவல்களை சேரித்து தொகுத்தர்ல் அது ஒரு வரலாற்றின் அடையாளமாக இருக்கும் என நம்புகிறேன். அது இன்னும் ஒரு பெரிய சரித்திரத்தை எழுதுவதற்கு ஆதாராமாகக் கூடிய தகவல்களாக இருக்கும் என நம்புகிறேன்.
எனக்கு பின்னால், என்னை விட அறிவிலும், ஆற்றலிலும், ஆராய்ச்சிலும் மிக்கவர்கள் வருங்காலத்தில் எனது ஊரிலே வருவார்கள். அவர்கள் இதனை அடிப்படையாக வைத்து இதன் தொடர்ச்சியை எழுதி தொடர்வார்கள் என்கிற நம்பிக்கையும் எனக்கு நிறைய உண்டு.
மறுபடியும் இதை வாசித்த உங்களுக்கு எனது வணக்கம். பாராட்டு.....
இது வரையில் தற்சமயம் விடைபெற்றுக் கொள்கிறேன். நன்றி....
அன்புடன்
ஜி.பாலசுப்பிரமணியன்