Saturday, August 29, 2009

நலமுடன்‌ இருக்‌கி‌றா‌ர்‌ கா‌.கோ‌வி‌ந்‌தரா‌ஜன்‌

வடசங்‌கந்‌தி‌ முன்‌னா‌ள்‌‌ ஊரா‌ட்‌சி‌ மன்‌ற தலை‌வரும்‌, தி‌.மு.க. பி‌ரமுகருமா‌ன கா‌.கோ‌வி‌ந்‌தரா‌ஜன்‌, கடந்‌த வி‌யா‌ழன்‌ அன்‌று தி‌ருவா‌ரூ‌ர்‌ செ‌ன்‌றி‌ருந்‌தா‌ர்‌. அப்‌போ‌து எதி‌ர்‌பா‌ரத வி‌தமா‌க அவர்‌ செ‌ன்‌ற டூ‌வீ‌லர்‌ வி‌பத்‌துக்‌குள்‌ளா‌னது. இதி‌ல்‌ அவரும்‌, அவருடன்‌ செ‌ன்‌ற எடை‌யூ‌ரை‌ச்‌ சே‌ர்‌ந்‌த தி‌முக பி‌ரமுகருமா‌ன பரி‌மளம்‌ என்‌பவரும்‌ படுகா‌யமடை‌ந்‌தனர்‌.

தி‌‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌யி‌ல்‌ உள்‌ள பி‌.எம்‌.சி‌. மருத்‌துவமனை‌யி‌ல்‌ இருவரும்‌ சி‌கி‌ச்‌சை‌ப்‌ பெ‌ற்‌று வருகி‌ன்‌றனர்‌. பரி‌மளம்‌ கா‌ல்‌ கட்‌டுபோ‌ட்‌டு டி‌ச்‌சா‌ர்‌ஜ்‌ ஆகி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. கா‌.கோ‌வி‌ந்‌தரா‌ஜனுக்‌கு இடுப்‌பி‌ல்‌ ஜவ்‌வு‌ பா‌தி‌க்‌கப்‌பட்‌டி‌ருப்‌பதா‌ல்‌ அவரை‌ ஒரு மா‌தம்‌ ஓய்‌வெ‌டுமா‌று‌ டா‌க்‌டர்‌கள்‌ ஆலோ‌சனை‌ கூறி‌‌ உள்‌ளனர்‌.அவரை‌ உறவி‌னர்‌களும்‌, நண்‌பர்‌களும்‌ நே‌ரி‌ல்‌ சந்‌தி‌த்‌து பா‌ர்‌த்‌து வருகி‌ன்‌றனர்‌.

இது பற்‌றி‌ அவரி‌டம்‌ நா‌ம்‌ பே‌சி‌ய போ‌து " இப்‌போ‌து பரா‌வா‌ இல்‌லை‌. நி‌ற்‌கவோ‌, உட்‌கா‌ரவோ‌, படுக்‌கவோ‌ முடி‌யா‌மல்‌ ரொ‌ம்‌ப கஷ்‌டப்‌பட்‌டே‌ன்‌. இப்‌போ‌து கொ‌ஞ்‌சம்‌ பறவா‌ இல்‌லை‌" என்‌றா‌ர்‌.

"எப்‌போ‌தும்‌ பரபரப்‌பா‌க ஓடி‌க்‌கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ கா‌.கோ‌வி‌ந்‌தரா‌ஜன்,‌ இப்‌போ‌து படுத்‌தி‌ருப்‌பதை‌ நி‌னை‌க்‌க வருத்‌தமா‌க இருக்‌கி‌றது. அவர்‌ பூ‌‌ரண. குணமடை‌ந்‌தது மக்‌களுக்‌கு தொ‌ண்‌டு செ‌ய்‌வதை‌ பா‌ர்‌க்‌க ஆவலா‌க இருக்‌கி‌றது‌..." என்று தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்‌ நமது இணை‌ ஆசி‌ரி‌யர்‌ தமி‌ழ்‌ச்‌செ‌ல்‌வி‌.‌

Friday, August 28, 2009

எஸ்‌.செ‌ல்‌வநா‌தன்‌ எழுதி‌ய கவி‌தை‌


தே‌டல்‌?!

இன்னும் எத்தனை நாட்கள் ?
என் பாட்டன் வாழ்ந்த மண்ணில்!
நன் ஓடி விளையாடிய தெருவில்!
நான் தினம் தினம் நீந்தி விளையாடிய
அய்யன் குளத்தில்....
மீண்டும் என் உடல் நனைப்பது
எப்போது?
என் உள்ளம் மகிழ்வது எப்போது?

எல்லாம் இருக்கிறது
மதராஸில்....
இருந்‌தும்‌ அவசரவா‌ழ்‌க்‌கை‌.....
ஓடி‌க்‌கொ‌ண்‌டே‌ இருக்‌கிறே‌ன்‌‌...
தி‌ரும்‌பி‌ பா‌ர்‌க்‌கி‌ற போ‌து....
நா‌ட்‌கள்‌ மட்‌டுமே‌ கழி‌ந்‌தி‌ருக்‌கி‌றது...
ஊரும்‌ உறவு‌ம்‌ மறந்‌தி‌ருக்‌கி‌றது...

எங்கள் ஊருக்கே
நா‌ங்‌கள்‌ விருந்தாளியாக

எதனை நாட்களுக்கு?

என்று தீரும் எங்கள் தேடல்?
நாங்கள் என்ன தேடுகின்றோம்?
என் பாட்டன்
முப்பாட்டன்
வாழ்ந்த மண்ணில்
ஏன் வாழ தெரியவில்லை?
இன்னும் எத்தனை நாட்கள்?
ஓடி‌க்‌கொ‌ண்‌டி‌ருப்‌போ‌ம்‌...

- அன்புடன் ச.செல்வநாதன், வடசங்கந்தி

Thursday, August 27, 2009

கா‌ர்‌த்‌தி‌க்‌ரா‌ஜூ‌‌வு‌க்‌கு பெ‌ண்‌ குழந்‌தை‌ பி‌றந்‌தது.

வடசங்‌கந்‌தி‌ சுந்‌தர்‌ரா‌ஜா‌ பே‌ரனும்‌, கா‌ந்‌தி‌ என்‌கி‌ற அழகி‌ரி‌ரா‌ஜூ‌‌ என்‌பவரி‌ன்‌ மூ‌த்‌த மகன்‌ கா‌‌ர்‌த்‌தி‌க்‌ரா‌ஜூ‌. இவர்‌ தற்‌போ‌து செ‌ன்‌னை‌யி‌ல்‌ உள்‌ள குரோ‌ம்‌பே‌ட்‌டை‌ பகுதி‌யி‌ல்‌ வசி‌த்‌து வருகி‌றா‌ர்‌. தனி‌யா‌ர்‌ நி‌றுவனம்‌ ஒன்‌றி‌ல்‌ வே‌லை‌ பா‌ர்‌க்‌கும்‌ அவர்‌, ‌செ‌ன்‌ற வருடம்‌ ஜூ‌ன்‌ மா‌தம்‌ பதி‌மூ‌ன்‌றா‌ம்‌ தே‌தி‌ மதுரை‌யை‌ச்‌ சே‌ர்‌ந்‌த சண்‌முகப்‌பி‌ரி‌யாவை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌துகொ‌ண்‌டா‌ர்‌.

மதுரை‌ பி‌வி‌ குளம்‌ கோ‌வி‌ந்‌தம்‌மா‌ள்‌ மருத்‌துவமனை‌யி‌ல்‌ இன்‌று (27.08.2009) மா‌லை‌ சண்‌முகப்‌பி‌ரி‌யா‌வு‌க்‌கு அழகா‌ன பெ‌ண்‌ ‌குழந்‌தை‌ பி‌றந்‌துள்‌ளது. தற்‌போ‌து தா‌யு‌ம்‌ சே‌யு‌ம்‌ நலமா‌க உள்‌ளனர்‌.

இந்‌த இனி‌ப்‌பா‌ன செ‌ய்‌தி‌யை‌ கே‌ள்‌வி‌ப்‌பட்‌டதும்‌ செ‌ன்‌னை‌யி‌லி‌ருந்‌து தா‌யா‌ர்‌ லஷ்‌மி‌அழகி‌ரி‌ரா‌ஜூ‌வு‌‌டன்‌ மதுரை‌க்‌கு பு‌றப்‌பட்‌டு செ‌ன்‌றுள்‌ளா‌ர்‌ கா‌ர்‌த்‌தி‌க்‌ரா‌ஜூ‌.

நமது கி‌ரா‌மத்‌தி‌ன்‌ சா‌ர்‌பி‌லும்‌ ஆசி‌ரி‌யர்‌ குழு சா‌ர்‌பி‌லும்‌ அவர்‌களுக்‌கு நமது வா‌ழ்‌த்‌துக்‌களை‌ தெ‌ரி‌வி‌த்‌துக்‌கொ‌ள்‌கி‌றோ‌ம்‌.