குலமாணிக்கம் கிராமத்தில் மிராசுதாரக இருந்தவர் காசிநாத தேவர். இவரது மனைவி வேதாம்பாள். கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரி இல்லாமல் இருந்தவர், கடந்த (31.08.2012) வெள்ளி அன்று காலமானர். அவருக்கு வயது 75.
ஏற்கனவே காசிநாததேவர் காலமாகிவிட்டார். இவர்களுக்கு கா.கோவிந்தராஜன், முருகேசன் என இரு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். மகளை சிரமேல்குடி கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்தனர். அவருக்கு நமசிலாயம் என்கிற மகன் இருக்கிறார்.
வடசங்கந்தி பக்கிரிசாமி தேவர் மகள் பங்கஜவள்ளி என்பவரை திருமணம் செய்து கொண்டார் கா.கோவிந்தராஜன், பிறகு வடசங்கந்தியிலேயே செட்டிலாகிவிட்டார். வடசங்கந்தி முன்னாள் கிராமத் தலைவராகவும் பதவி வகித்தார்.
மறைந்த வேதாம்பாள் உடலுக்கு உறவினர்களும், நண்பர்களும், கிராம மக்களும் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் மறுநாள் மாலை வடசங்கந்தி இடுகாட்டில் உடல் தகவனம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment