
வடசங்கந்தி சொக்கப்பன் நகரில் வசிப்பவர் ஆர்.வி. சுப்பிரமணியன். அவரது மூத்த மகள் வினோதினியை தனது மைத்துனரும் சகோதரியின் மகனுமான வைரமூத்திக்கு திருமணம் செய்து வைத்தார். இன்று வைரமூர்த்தி - வினோதினி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நேற்று உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் திருத்துறைப்பூண்டி குமரசாமி மருத்துவமனையில் வினோதினியை சேர்த்திருந்தனர். இன்று இரவு 09.40 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கி குழந்தை பிறந்த மகிழ்ச்சியை வைரமூர்த்தி கொண்டாடினார். அவருக்கு மாமா ஆர்.வி.சுப்பிரமணியன், சகோதரர்கள் சண்முகசுந்தரம், முருகேசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னையில் இருந்து வடசங்கந்தி நியூஸ் ஆசிரியர் பாலன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு எஸ்.எம்.எஸ் மூலமும், இ- மெயில் மூலமும் உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
This comment has been removed by the author.
ReplyDelete