சென்னை, ஆகஸ்ட். 2- வடசங்கந்தியில் வசிக்கும் வீரப்பசாமி - வைரக்கண்ணு தம்பதிகளின் மூத்த மகன் குமார். இவர் திரைப்படத்துறையில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். தற்போது ஏவி. எம். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய், அனுஷ்கா நடிப்பில் பாபுசிவன் இயக்கும் வேட்டைக்காரன் படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் விஜயுடன் வசனம் பேசி நடித்தார். அவர் நடித்ததை விஜய் ஆர்வத்துடன் பார்த்ததுடன் அவரை நடிகரே நடிகரே என்று கிண்டல் செய்தார். படத்தில் நடித்த அனுபவம் பற்றி அவரிடம் கேட்டதற்கு படம் வெளிவரும் போது பார்த்துக்கொள்ளுங்கள். இப்பவே நாம் நடித்ததை பற்றி பெரிதாக பேசக்ககூடாது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment