வடசங்கந்தி மேலத்தெரு சொக்கப்பன் நகரில் வசிப்பவர் கோ.சண்முகசுந்தரம். இவரது தம்பி பாலு (பாலசுப்பிரமணியன்). இவர் ஒத்த வீடு என்கிற படத்தை கதை வசனம் எழுதி டைரக்ஷன் செய்திருந்தார்.
இந்தப் படத்தில் புதுமுகங்கள் திலிப்குமார், ஜானவி, கிரண்மை, வடிவுக்கரசி, எம்.எஸ்.பாஸ்கர், நெல்லி சிவா, திரவியபாண்டியன், இமான் உட்பட பலர் நடிக்க வீ.தஷி இசையமைத்திருந்தார்.ஸ்ரீரஞ்சன் ஒளிப்பதிவு செய்ய சங்கர் இத்திரிஸ் எடிட்டிங் செய்துள்ளனர். விஷ்ஷிங் வெல் புரொடக்ஷன்ஸ் சார்பில் தேவ்குமார் தயாரித்திருந்த இந்தப் படம் கடந்த மார்ச் முப்பதாம் தேதி தமிழகம் எங்கும் திரையிடப் பட்டது.
திருத்துறைப்பூண்டி எஸ்.என்.எஸ். திரையரங்கிலும் இந்தப் படம் வெளியானது. படத்தை காண திருத்துறைப்பூண்டிக்கு வடசங்கந்தி உறவினர்களும், நண்பர்களும் திரண்டனர்.
இந்தப் படம் தமிழகத்தில் ஏராளமான திரையங்கில் மூன்று வாரங்களை கடந்து வெற்றிக்காரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment